Posts

Showing posts from 2018
நினைவாற்றல் – ஒரு கலை நினைவாற்றல், அதாவது, ஞாபக சக்தி என்பது நபர்களுக்கு நபர் வேறுபடுகிறது. பெயர்கள், தொலைபேசி எண்கள், திருமண நாள் மற்றும் சில முக்கியமான தேதிகளை சிலர் சிறப்பாக ஞாபகம் வைத்திருப்பார்கள். சிலருக்கோ முக்கியமான நபர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் கூட உடனே நினைவுக்கு வராது. ஞாபக சக்தியை வளர்க்க சிறப்பாக பயன்படுத்தும் திரு.எஸ்.தெய்வநாயகம் அவர்கள் இன்று நம்முடன் உள்ளார்கள். ஞாபகசக்தியை உயர்த்துவது பற்றி அவரிடம் கேட்போம். வணக்கம். கே 1 : நம் அன்றாட வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் வாழ்வில் ஞாபகசக்திக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. ஞாபகசக்தியை எப்படி வளர்த்துக் கொள்வது? ஞாபகம்ங்கறது ஒர் விஷயத்தை நினைவில் பதித்துக்கொண்டு அதை தேவைப்படற நேரத்தில் திரும்பக் கொண்டு வருவது தான். நம்மில் சிலர் எல்லா விஷயத்தையும் ஞாபகத்துல வச்சிருப்பாங்க. ஆனால் நிறைய பேரு ஞாபகசக்தி ரொம்ப குறைவு அப்படின்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. உண்மையிலே மறக்கறதும் கூட சில சமயங்கள்ல நமக்கு அவசியம் தான். கடவுள் நமக்குத் தந்த மிகப் பெரிய வரப்பிரசாதம் மறந்து போகிறதுங்கறது. நிறைய சோகமான விஷயங்களை காலப்போக்கில் மறந...