நினைவாற்றல் – ஒரு கலை
நினைவாற்றல், அதாவது, ஞாபக சக்தி என்பது நபர்களுக்கு நபர் வேறுபடுகிறது. பெயர்கள், தொலைபேசி எண்கள், திருமண நாள் மற்றும் சில முக்கியமான தேதிகளை சிலர் சிறப்பாக ஞாபகம் வைத்திருப்பார்கள். சிலருக்கோ முக்கியமான நபர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் கூட உடனே நினைவுக்கு வராது. ஞாபக சக்தியை வளர்க்க சிறப்பாக பயன்படுத்தும் திரு.எஸ்.தெய்வநாயகம் அவர்கள் இன்று நம்முடன் உள்ளார்கள். ஞாபகசக்தியை உயர்த்துவது பற்றி அவரிடம் கேட்போம்.
வணக்கம்.
கே 1 : நம் அன்றாட வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் வாழ்வில் ஞாபகசக்திக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. ஞாபகசக்தியை எப்படி வளர்த்துக் கொள்வது?
ஞாபகம்ங்கறது ஒர் விஷயத்தை நினைவில் பதித்துக்கொண்டு அதை தேவைப்படற நேரத்தில் திரும்பக் கொண்டு வருவது தான். நம்மில் சிலர் எல்லா விஷயத்தையும் ஞாபகத்துல வச்சிருப்பாங்க. ஆனால் நிறைய பேரு ஞாபகசக்தி ரொம்ப குறைவு அப்படின்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. உண்மையிலே மறக்கறதும் கூட சில சமயங்கள்ல நமக்கு அவசியம் தான். கடவுள் நமக்குத் தந்த மிகப் பெரிய வரப்பிரசாதம் மறந்து போகிறதுங்கறது. நிறைய சோகமான விஷயங்களை காலப்போக்கில் மறந்துட்டு பழைய மாதிரி சகஜ நிலைக்கு வர்றதுக்கு மறதி ரொம்ப அவசியம். இருந்தாக்கூட நம்ம ஞாபகசக்தியை வளர்த்துக்கிட்டோம்னா மேலும் மேலும் பல வெற்றிகளைப் பெறமுடியும். ஞாபகசக்தியை வளர்த்துக் கொண்டால் மேலும் மேலும் பல படிகளைத் தாண்டிப் போகமுடியும்.
பொதுவாக நமக்கு ஞாபகசக்தியை அள்விட மூன்று வகைகள் இருக்கின்றன. 
1. பரம்பரையாக வம்சாவளியாக வருவது. நம்ம குடும்பத்துல யாருக்காவது அதிகமான ஞாபகசக்தி இருந்தா அது அப்படியே சந்ததியாக தொடர்ந்து வரலாம். இதுல நம்மோட ஈடுபாடு முக்கியம். நமக்கு சின்ன வயசுல நடந்த நிகழ்ச்சிகள் திடீரென ஞாபகத்திற்கு வருவது. முதன்முறையாக ரயில்ல போனது, கடல் பார்த்தது போன்ற விஷயங்கள். இந்த மாதிரி விஷயங்கள்ல ஏதாவது தனிப்பட்ட புதிய அனுபவங்கள் கிடைச்சிருக்கும். நம் வீட்டில் உள்ள பாட்டி, தாத்தாக்கள் பல விஷயங்களை இன்று நடந்தது போல சொல்றத பார்க்கலாம்.
2. இரண்டாவதாக, நாம தினசரி செய்கிற வேலைகளின் தொடர்பான ஞாபகம். பிஸினஸ்ல, வாடிக்கையாளர்களின் அத்தனை விபரங்களையும் முதலாளி ஞாபகம் வச்சிருக்கிறது. நாம எப்போதும் போகக்கூடிய ஹோட்டல்ல போன உடனேயே சுகரில்லாம காபி போடறது. பேங்க் மானேஜர் கஸ்டமரோட டெபாசிட் பத்தி ஞாபகம் வச்சிக்கிடறது. இதெல்லாம் பயிற்சி இல்லாமலே தொடர்ந்து செய்யறதுனால நினைவில் பதியக்கூடிய விஷயங்கள்
3. மூணாவதா, பயிற்சி மூலம் ஞாபகசக்தியை வளர்த்துக் கொள்வது. ஒவ்வொரு விஷயத்தையும் சும்மா ஞாபகம் வைக்காம ஸ்பெஷலாக பயிற்சி செய்து ஞாபகம் வச்சா எப்ப வேணாலும் திரும்ப நினைவுக்குக் கொண்டு வர முடியும்.இது வந்து நம்ம வீட்ல சாவி, பர்ஸ் இதெல்லாம் எப்பவும் ஒரே இடத்துல வச்சு பழகினா எடுக்கறது சுலபம் இல்லயா, அது மாதிரி தான். குழந்தைகளின் ஷூ, ஸாக்ஸ் இதெல்லாம் ஸ்கூல் புறப்படும்போது தேடுவது பல வீடுகளில் பழகிப்போன ஒன்று.
ஞாபக சக்தியைப் பற்றி பொதுவான விஷயங்களை சொன்னீங்க. இதில  Memory வேற Category இருக்கா?
ஆமாம். ஞாபகம் வக்கிறதுல கூட இரண்டு வகை இருக்கிறது. ஒன்று குறுகிய கால நினைவு (Short Term Memory). இன்னொன்று நீண்ட கால நினைவு (Long Term Memory)
Short Term Memoryங்கறது அடிக்கடி தேவைப்படாத ஒருமுறை மட்டுமே அவசியப்படறது. உதாரணமாக, இப்ப நாம ரயில்ல பிரயாணம் செய்றோம். அப்ப நமக்குக் கிடைக்கிற பெர்த் நம்பர், என்ன கோச் இதெல்லாம் டிராவல் பண்ணி முடிக்கிற வரைக்கும் ஞாபகத்துல வச்சிருந்தா போதும். போன் நம்பர்கள் கூட சில நம்பர்கள் ஒரு முறை பண்ணி விட்டு மறந்து விடுவோம். இந்த மாதிரியான Memoryக்கு ஸ்பெஷலா பயிற்சிகள் ஒண்ணும் வேண்டாம். நம் மனசே ஆட்டோமேடிக்கா அதை பார்த்துக்கும்
Long Term Mmoryங்கறது பல விஷயங்களைரொம்ப நாள் கழிச்சு கூட நினைவில் வச்சிருப்பது. உதாரணமா நம்ம கல்யாண நாள், நம்ம பிறந்த நாள், நாம காலேஜ்ல படிச்சது, நம்ம ஆபிஸ்ல ஜாயின் பண்றது இந்த மாதிரியான விஷயங்கள் நம்ம நினைவை விட்டு அவ்வளவு சீக்கிரம் போறதில்லை. இந்த மாதிரி நம்ம சம்பந்தப்பட்ட விஷயங்கள் இல்லாம மற்றவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்லயும் நம்ம நிறைய ஞாபகம் வைக்க வேண்டியிருக்கிறது. இந்த மாதிரியான Long Term Memory ல வைக்க வேண்டிய விஷயங்கள, பயிற்சியின் மூலம் அதிகரித்துக் கொள்ளமுடியும்.
கே 3 ஞாபக சக்தியை வளர்ப்பதற்கு நாம் என்ன முயற்சிகள் எடுக்கணும்? கொஞ்சம் விபரமா சொல்லுங்க.
 நிச்சயமா சொல்றேங்க. ஞாபக சக்தியை வளர்க்கறதுல அனேகமா உடம்போட எல்லா பகுதிகளுக்கும் தொடர்பு இருக்குது. நம்ம ஐந்து வகையான உணர்ச்சிகளுக்கும் கூட பங்கு இருக்கிறது.
1.     பார்க்கிறது
2.     கேட்கிறது
3.     தொடும் உணர்ச்சி
4.     ருசியறிதல்
5.     மணமறிதல்
சில விஷயங்கள் பார்த்தா உடனே வேறு சில விஷயம் ஞாபகத்துக்கு வ்ரும். சில பாடல்கள் பழைய பாடல்களானாலும் கேட்டால் உடனே அப்பாடல்கள், அதன் காட்சிகள் நினைவுக்கு வருவது. அம்மாவோட சாப்பாடு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறதுண்டு. நம் Body Parts  ல மூளை மிகவும் முக்கியமான உறுப்பாக செயல்படுது. மூளையின் செயல்பாட்டை ரெண்டு பகுதியா பிரிச்சுக்கறோம்.
ஒன்று இடது பக்க மூளை. இன்னொன்று வலது பக்க மூளை.

உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும் இடது பக்க மூளை உடம்பின் வலது பகுதியை கண்ட்ரோல் பண்ணுது, வலது பக்க மூளை உடம்பின் இடது பகுதியை கண்ட்ரோல் பண்ணுது.இதுல இடது பக்க மூளை நாம எப்பவும் செய்கிற தொடர்ச்சியான வேலைகளை கவனிச்சுக்கிடுது.இடது பகுதியோட ஆதிக்கம் நம்மளோட வார்த்தைகள், நம்பர்கள், Analysis, Language, Sequence இவற்றில் இருக்கும். இதில் ஏதாவது ஞாபகம் வரும்போது இடது பக்க மூளை மிக வேகமாக செயல்படுகிறது. நம்மோட தினசரி உபயோகத்தில் 90 சதவிகிதம் இடது பக்க மூளையைத் தான் உபயோகப்படுத்துகிறோம். உதாரணமாக ஆபிஸ்க்குப் போறது, வீட்டுக்கு வர்றது, ஸ்கூலுக்குப்போறது, computer program எழுதறது.
   ஆனா அதே சமயம் வலது பக்க மூளை கலர், ரிதம், Imagination, Dimension, Creativity இது மாதிரியான விஷயங்கள கண்ட்ரோல் பண்ணுது. நாம எப்பவெல்லாம் வலது பக்க மூளையை உபயோகப்படுத்தி நாம நிகழ்ச்சிகளை நினைவு வைக்கும் போது அது ரொம்ம நாள் ஞாபகத்திலிருக்குது. உதாரணமாக நாம பார்க்கும் சுற்றுலாத் தலங்கள், அருவி, மலை இதெல்லாம் நாம் ஒருபோதும் மறக்கிறது இல்லை.
கே 4 அருவி, மலை இதெல்லாம் ஞாபகம் வச்சிருக்கிற நமக்கு பரீட்சை ஹாலில் சில கேள்விகளுக்கு பதில் மனதில் இருந்தாலும் ஞாபகத்திற்கு வராததால் விடை எழுத முடியவில்லையே? ஏன்?
இந்த மாதிரி பிரச்னைகள் எல்லோருக்கும் சகஜமாக ஏற்படும். அத சரி பண்றதுக்கு என்ன பண்ணனும்னா, படிக்கும்போதே
             நல்ல கவனிச்சுப் படிக்கிறது (Observation)
            பொருள் புரிந்து படிக்கிறது (Understanding)
             திரும்ப திரும்ப படிக்கிறது (Revision)
          எழுதிப் படிக்கிறது (Writing)
என  நாம் படிக்கப் பழக வேண்டும்.
கவனித்துப் படிக்கறதுங்கறது படிக்கிற போது ஒரே கவனத்தில் கவனம் வேற எங்கயும் சிதறாம படிக்கிறது. இந்த மாதிரி படிக்கும் போது ஆழ்மனதில் எளிதில் பதிந்து விடுகிறது.
பொருள் புரிந்து படிக்கும் பொழுது படிக்கிறத விருப்பத்துடன் படிக்க வேண்டும். அந்த பாடத்தில் ஏற்படற சந்தேகத்தை அப்பப்ப தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கிளாஸ்ல சந்தேகம் கேட்கிறவன் அப்ப மட்டும் தான் முட்டாள். ஆனால் கேட்காதவன் வாழ்க்கை பூராவும் முட்டாள்.
திரும்பத் திரும்பப் படித்தல்ங்கறது நாம எத்தனை முறை படிக்க முடியுமோ அத்தனை முறை படிக்க வேண்டும். ஒரு பாடம் படித்துவிட்டு ஒரு வாரத்திற்குள் அதை திரும்பப் படிக்கவில்லை என்றால், அந்தப் பாடத்தில் 50 சதவிகிதம் மறந்து போகும். ஒரு மாசத்துக்குள் திரும்பப் படிக்கலேன்னா அந்தப் பாடத்தில் 80 சதவிகிதம் மறந்து போகும். அதனால படிக்கிற பாடத்தை வாரத்தில் இரண்டு முறையாவது திரும்பப் படிக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்தால் அது நீண்டகாலம் நம் மனசை விட்டுப் போகாது. எப்போதும் நம் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். இது பாடத்துக்கு மட்டுமல்ல, எல்ல விஷயத்திலேயும் உபயோகமா இருக்கும்.
கே 5 அப்படின்னா சரியாகப்படிச்சா ஒண்ணுமே மறக்காதுன்னு சொல்றீங்க. ஆனாலும் இடையிடையிலே பலதும் மறந்து போகுதே? அது எப்படி?
ஆமாங்க. மறதிங்கறது ஒரு நிஷயமே இல்ல. நாம மறந்து போறதா நினைக்கற விஷயம் நம்ம நினைவில் ஏற்கென்வே இருக்கு. அத நாம எப்படி எடுத்துக்கிடறோம்ங்கறத பொறுத்து தான் அது ஞாபகமா மறதியான்னு தீர்மானிக்க முடியும். எந்த ஒரு விஷயத்தையுமே ஒரு ஈடுபாடோ, விருப்பமோ இல்லாம கேட்டா அது சுலபமா மறந்து போகும். ஆனா அது மறதி இல்ல. ஆழ்மனதில் அடித்தளத்தில் அது உறைந்து கிடக்கிறது. அத மீண்டும் வெளியே கொண்டு வர முயற்சி செய்யும் போது அது மறந்து போனதா தோற்றமளிக்குது. அதனால எந்த விஷயத்த கேட்டாலும் அத விருப்பத்தோட ஒரு ஈடுபாடோட கேட்கணும். எல்லாவற்றையும் நம்பிக்கையோட பார்க்கணும். எதிலயும் positive approach இருந்தா நல்லது. இதில நாம கவனிக்க வேண்டியது என்ன அப்படின்னா, அடிக்கடி நாம மறந்து போகிற ஒரு விஷயம் புதிய ஆள்கள் கிட்ட நம்மள அறிமுகம் செய்யும் போது பெரும்பாலான சமயங்களில் அவங்க முகம் ஞாபகம் இருக்கும். ஆனா பெயர் மறந்து போகும். இந்த உலகத்துல எல்லோருக்கும் அவங்கவங்க பேரு ரொம்ப முக்கியமான விஷயம். அதனால யாரையுமே அவங்களோட பேரைச் சொல்லிக் கூப்பிடும் போது சந்தோஷமா feel  பண்ணுவாங்க. இதுக்கு ஒரு சுலபமான வழி என்னன்னா அந்த நபரை அறிமுகம் செய்யும் போது அவரோட பெயரை உச்சரித்து அவங்கள கூப்பிடணும். கேள்வி கேக்கணும். உதாரணமாக ஒரு பத்து நிமிடத்துக்குள்ள மூணு தடவையாவது அந்த பெயரை உச்சரிக்கும் பொழுது, அது நம் நினைவை விட்டு அகலாது.
ராஜன், சௌக்கியமா இருக்கீங்களா?
ராஜன், கோவிலுக்குப் போகலாமா?
ராஜன், சாப்பிடப் போகலாமா?

என்று கேட்பதன் மூலம் ராஜனும் அவரது முகமும் நம் மனதில் பதிந்து விடும். பிறகு வீட்டிற்குப் போன பிறகு ஒரு முறை அந்த அறிமுகத்தை நினத்துப் பார்த்து விட்டால் அந்தப் பெயரும் அவரது அறிமுகமும் மறந்து போகாது. இது ஞாபகசக்தியை வளர்ப்பதற்கான ஒரு வழி.
 நீங்க சொல்றத பார்த்தா எல்லாத்தையுமே ஏஸியா ஞாபகத்துல வச்சுக்கலாம் போல இருக்கே, அதற்கான பயிற்சிகளை எல்லாம் சொல்லித் தர்றீங்களா?
    நிச்சயமா. ஞாபக சக்தியை வளர்த்துக்கிடணும்னா, தன்னம்பிக்கையை நல்ல வளர்த்துக்கிடணும். எனக்கு எல்லாமே மறந்து போகுதுன்னு சொல்றத விட்டுட்டு எல்லாமே எனக்கு ஞாபகம் இருக்கும்னு திரும்பத் திரும்ப சொல்லணும். இப்படி சொல்றதுனால, நம்ம ஆழ்மனதில் எதையும் ஞாபகம் வைக்க முடியும்கற feeling ரொம்ப strong ஆ பதிவாகும். இன்னும் சில பயிற்சிகள் மூலமாகவும் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும். முதல்ல மூச்சுப்பயிற்சி.
ஆழமா மூச்சை உள்ளே இழுத்து நிதானமா வெளியேற்றுவது. மிகவும் மெதுவா மூச்சை எவ்வளவு உள்ளே இழுக்க முடியுமோ, அவ்வளவு உள்ளே இழுக்கணும். அதே போல் மிஅவும் மெதுவா எவ்வளவு அதிகம் வெளியேற்ற முடியுமோ அவ்வளவு வெளியே விடணும். இதை திறந்த வெளியில் நின்று செய்யவேண்டும். இதன்மூலம் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகக் கிடைக்கும். ஆக்ஸிஜனும் நிறையக்கிடைக்கும். இதே போல மூளக்கு ஆக்ஸிஜன் தரக்கூடிய வேற சில உடற்பயிற்சிகள் நடக்கிறது, ஓடறது, யோகா செய்வது.

இரண்டாவது முக்கியமான பயிற்சி, தியானம் செய்யறது. தினந்தோறும் பத்து நிமிடமாவது தியானம் செய்து வந்தால் அது நல்ல உபயோகமா இருக்கும். தியானம்னு சொன்ன உடனே ரொம்ப பயப்படவேண்டாம். ஏதாவது ஒரு பொருளை மட்டும் எடுத்துக்கொண்டு மனச ஒருமுகப்படுத்தி அந்தப்பொருளை மட்டும் நினைத்துக் கொண்டிருப்பது. இப்படிச் செய்யறதனால concentration improve ஆகுது. 

மூணாவதா நம்பர் 1 முதல் 100 வரை வரிசையா சொல்லாமல் 100 முதல் 1 வரை தலைகீழா சொல்றது. 100, 99, 98, 97 ங்கற மாதிரி. அது மாதிரி A முதல் Z வரையுள்ள Alphabet  எழுத்துக்களை Z முதல் A வரை திருப்பிச் சொல்லணும். Z, Y, X, W ங்கற மாதிரி. இப்படிச் சொல்றதுனால நம்ம மூளையில உள்ள neuron கள் புதுசாகுது.  நம் மூளையில 10 கோடிக்கும் அதிகமான நியுரான்கள் இருக்கின்றன. ஆனா இதுல நாம் அதிக பட்சமா 50000 நியுரான்கள மட்டும் தான் உபயோகப் படுத்துறோம். நியுரான்ங்கறது, ஒண்ணோட ஒண்ணு தொடர்பு கொண்டு நிறைய விஷயங்கள அடுக்கடுக்கா ஞாபகம் வச்சிருக்க உதவுது. இந்த மாதிரியான பயிற்சிகள் செய்யும் பொழுது நியுரான்களிலுள்ள சங்கிலித்தொடர் ரொம்ப விரிவடையும். இது மூலமா, மூளைக்குப் புதிய சக்திகள் உண்டாகும்.
சிலர் தொடர்பில்லாத பொருட்களை வரிசையா ஞாபகம் வச்சிருக்காங்களே, அது எப்படி?
அது ரொம்ப ஈஸிங்க. வேணா நீங்க ஒரு பத்து items சொல்லுங்க. அத எப்படி ஞாபகத்தில வச்சுக்கணும்னு நான் சொல்லித்தர்றேன்.
1.   படகு
2.   தங்கம்
3.   மழை
4.   ஹோட்டல்
5.   அமிதாப் பச்சன்
6.   போலீஸ்
7.   பிரதம மந்திரி
8.   குழந்தைகள்
9.   கிரிக்கெட்
10. சினிமா
 நீங்க சொன்ன பத்து விஷயத்தையும் ஞாபகத்துல வச்சுக்கறதுக்கு முன்னால visualization பத்தி கொஞ்சம் சொல்றேன். Visualization ங்கறது கண்ண மூடிகிட்டு ஒரு பொருளை, காட்சியை நினைவு படுத்திப்பார்க்கறது. அந்தப் பொருளை நினைக்கும் போதே, அந்தப் பொருளோட தொடர்புடைய எல்லா விஷயங்களையும் மனசில வர்ற மாதிரி visualize பண்ணனும். உதாரணமா கார் அப்படின்னு நினைச்சுக்கிட்டோம்னா காரோட கம்பெனி, ஸ்பீடு, பெட்ரோல் வாசம், ரோடு எல்லாம் ஞாபகத்துக்கு வரணும். இப்போ நீங்க சொன்ன பத்து வார்த்தைகளையும் எப்படி visualize பண்றதுன்னு பார்க்கலாம்.
      முதல்ல படகு, படகு என்பதை கற்பனை செய்யும்போது அத மிகப்பெரிய படகா, கற்பனை செய்யவேண்டும். கூடவே அது போகிற சத்தம், தண்ணீரோட சப்தம், எல்லாம் கற்பனையில வரணும், அப்படிப் போகும்போது அந்தப் படகில நிறைய தங்கம், நீங்க சொன்ன இரண்டாவது வார்த்தை, கட்டி கட்டியா வச்சிருக்காங்க. அப்ப நல்ல மழை பெய்கிறது. அந்த மழை நீங்க சொன்ன மூணாவது வார்த்தை. தங்கக்கட்டியில் பட்டுத் தெறிக்கறது. படகில் இருப்பவர்கள் நேரா ஒரு ஹோட்டலுக்குப் போறாங்க. ஹோட்டல் ரொம்ப ரொம்ப பெரிய ஹோட்டல். ஹோட்டல்ல இருந்து அமிதாப்பச்சன், ஐந்தாவது வார்த்தை, அவருக்குப் பாதுகாப்பா நிறைய போலீஸ்காரங்களா வர்றாங்க .அந்த ஹோட்டலுக்கு அப்போ பிரதம மந்திரி வந்து இறங்குறாரு. பிரதம மந்திரிங்கறது நீங்க சொன்ன ஏழாவது வார்த்தை. பிரதம மந்திரியை கற்பனை செய்யும்போது கூடவே செக்யூரிட்டி, போலீஸ் எல்லாம் கற்பனை செய்துக்கங்க. பிரதம மந்திரியும் அமிதாப்பச்சனும் பக்கத்துல உள்ள ஸ்கூல்ல போய் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவதப் பார்க்கிறாங்க. இதெல்லாமே நம்ம பத்தாவது வார்த்தை சினிமால வர்ற காட்சி மாதிரி இருக்குது.

     இந்த மாதிரி தொடர்பில்லாத வார்த்தைகள் கூட தொடர்பு படுத்தி ஒரு கதையா மாற்றும் போது வரிசைக்கிரமமா நம்மால எதையும் ஞாபகம் வைக்க முடியும். இதுக்கு நயன ஸ்பந்தன் technique என்று பெயர். பாடம் படிக்கிற போது பாடத்திலுள்ள முக்கியமான வார்த்தையை எடுத்துக்கொண்டு இந்த மாதிரி தொடர்பு படுத்திப் படிக்கிற பொழுது இத Long Term Memory ஆ மாத்த முடியும்
     பாடம் படிக்கிறப்போ ஒரு Essay படிக்கணும்னா அந்த Essay ல உள்ள முக்கியமான வார்த்தையை underline செய்யணும். இனி அந்த Essay ஐ குறிக்கக்கூடிய ஒரு keyword எடுத்துக்கிட்டு அதை ஏன், எதற்கு, எப்படின்னு கேள்வி கேட்டுக்கிட்டு கொஞ்சம் கூட ஆழமாக மனதில் பதிய வைக்க முடியும். அப்புறம் underline செய்த வார்த்தையை மட்டும் மூன்றுமுறை Revise செய்யவும். இத 3R Technique என்றும் சொல்லலாம்.
 Read, Review, Revise
 அடுத்தது, Mnemonics னு சொல்வாங்க. இது ஒரு வார்த்தையை பல வார்த்தையாக பிரிப்பது. உதாரணமாக VIBGYOR வானவில்லில் உள்ள Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red இந்த ஏழு கலர்களையும் சிறிய குழந்தைகளுக்கும் மனதில் பதிய வைப்பதற்காக சொன்ன வார்த்தை. இதே மாதிரி நம்முடைய கிரகங்கள், planets ஐ வரிசையாக படிப்பதற்கு ஒரு Technique உபயோகப்படுத்தலாம். Mercury, Venus,Earth, Mars, Jupiter, Saturn, Uranus, Neptune. இந்த வரிசையை நினைவில் கொள்ள ஒரு sentence சொல்கிறேன்.
My Very Educated Mother Just Served Us Noodles.
இந்த sentence ஒவ்வொரு வார்த்தையிலும் முதல் எழுத்தையும் கிரகங்களின் முதல் எழுத்தையும் பார்த்தாப் போதும். நமக்கு எப்பவும் வரிசை மாறாது.
இந்த மாதிரி ஞாபகத்துல specialize பண்றதுக்கு யோகம், தியானம் தவிர உணவு முறைகள்ல ஏதாவது மாற்றம் தேவையா?
ஆமாங்க. சாப்பாடு உணவு விஷய்ங்கள்ல கொஞ்சம் கூட கவனம் செய்யணும். நிறைய தண்ணீர் குடிக்கணும். புரோட்டீன், கார்போஹைட்ரேட் நிறைந்த தானியங்கள், பழங்கள், கீரை, காய்கறிகள், பால் ஞாபகசக்தியை வளர்க்கறதுக்கு உதவுது. தண்ணீர் ரொம்ப முக்கியமானது. ரொம்ப நேரம் சாப்பிடாமல் இருக்கக்கூடாது. அதே நேரத்தில் சரியான இடைவெளியும் கொடுக்கணும்.
இது வரைக்கும் நீங்க சொன்னதிலேயிருந்து ஞாபகசக்தியை வளர்க்கறது சுலபம் தான்னு நினைக்கிறேன். இன்னும் ஏதாவது  Technique இருந்தா அதையும் சொல்லுங்களேன்.
   ஓ. தாராளமா கொடுக்கலாமே.
1.   நம்மை நாமே appreciate பண்ணனும்
2.   எல்லா செயல்களையும் வரிசையா Organize பண்றது
3.   Relaxed ஆ இருக்கறது ரொம்ப அவசியம்
4.   நிகழ்ச்சிகளை Category wise ஆ பிரிச்சுக்கணும்
5.   எல்லாத்தையும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு தொடர்புடைய நிகழ்ச்சியா மாத்தறது (Associate, Linking, Visualisation)
6.    நகைச்சுவை உணர்வு, நிறைய Joke சொல்லணும். எல்லா நிகழ்ச்சியையுமே நகைச்சுவையோடு கலந்து பார்த்தால் அது ரொம்ப உதவியா இருக்கும்.
7.   Creativity ஒரு விஷயத்தை நாம் புதுசா ஞாபகப்படுத்துனோம்னா அது ஒரு நாளுமே மறக்காது. உதாரணமா ஜப்பான்ல ஒரு மலையோட உயரம் 12,365 அடி.. இதை நம்ம ஞாபகம் வைக்கணும்னு சொன்னா, ஒரு வருஷத்துல 12 மாசமும், 365 நாளும் உண்டு. இதை மலையோட நாம லிங்க் பண்ணிட்டோம்னா அது ஒரு நாளும் மறக்காது
8.   எப்பவுமே நமக்கு எந்த field ல strength கூடுதல்னு கண்டுபிடிச்சு அத இன்னும் கொஞ்சம் கூட்டிக்கிடணும்
9.   ஒரு பாடத்தை சிறு பகுதிகளா பிரிச்சுட்டு அதை மீண்டும் சேர்த்துப் படிச்சோம்னா Memory Improve ஆகும். Split and Join Technique னு சொல்வாங்க.
10. கடைசியா,  use it or lose it. Memory  எவ்வளவு use பண்றமோ அவ்வளவு உதவி பண்ணும் இல்லேன்னா அது loss ஆயிடும்







Comments

Popular posts from this blog